கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் செஸ் மற்றும் சிலம்பம் போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்றவர்கள் வாழ்த்து பெற்றனர்

0
576

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை, இன்று (7.12.2019), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அபுதாபி செஸ் போட்டி – 2019, காமன்வெல்த்
U-18 செஸ் போட்டியில் “தங்கப் பதக்கம்” வென்ற கோவையைச் சேர்ந்த மாணவி செல்வி கே.பிரியங்கா, நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இம்மாணவி கே.பிரியங்கா இப்போட்டியில் கலந்து கொள்ள ரூ.1,50,000 வழங்கி உதவிய தருமபுரி நாடாளுமன்ற தொகுதி கழக உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் உடனிருந்தார்.

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை, இன்று (7.12.2019), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், 2019 அக்டோபர் மாதம் மலேசியாவில் நடைபெற்ற இவ்வாண்டுக்கான சிலம்பம் உலகக் கோப்பை போட்டியில் மினி சப்-ஜூனியர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சிவகாசியைச் சேர்ந்த சிறுமி ஸ்ரீதேவதர்ஷினி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இச்சிறுமி ஸ்ரீதேவதர்ஷினி இப்போட்டியில் கலந்து கொள்ள ரூ.40,000 வழங்கி உதவிய தருமபுரி நாடாளுமன்ற தொகுதி கழக உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் உடனிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here