கல்வீச்சு சம்பவத்தில் காயமடைந்த காவல் அதிகாரி மற்றும் காவல் ஆளிநர்களை காவல் ஆணையாளர் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்

0
308

நேற்று (14.02.2020) வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தின்போது, மேற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.பி.விஜயகுமார்,இ.கா.ப., அவர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டு, ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர காவல்இன்று (15.02.2020) காலை மேற்படி தனியார் மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் மேற்கு மண்டல இணை ஆணையாளரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர், நேற்றைய கல்வீச்சு சம்பவத்தில் காயமடைந்து, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் V-4 ராஜமங்கலம் காவல் நிலைய சட்டம் & ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.ராஜ்குமார், ஆயுதப்படை பெண் காவலர்கள் கலா (பெ.கா.எண்.42404) மற்றும் உதயகுமாரி (பெ.கா.எண்.44550) ஆகியோரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் இன்று (15.02.2020) சந்தித்து ஆறுதல் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here