கண்ணகிநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது. 700 கிராம் கஞ்சா பறிமுதல்

0
147

சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து கண்காணித்தல் மற்றும் அதிக அளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, J-11 கண்ணகிநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (28.01.2020) அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், கண்ணகி நகர், எழில் நகர் பகுதியில் ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு ஒரு நபர் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

அதன் பேரில் மேற்படி இடத்தில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த குள்ள விக்கி (எ) விக்னேஷ்வரன், வ/30, த/பெ.ராமன், எண்.33, 22வது பிளாக், எழில் நகர், என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 700 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட குள்ள விக்கி (எ) விக்னேஷ்வரன் விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here