கண்ணகிநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 4 நபர்கள் கைது. 2 கிலோ 700 கிராம் கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

0
325

சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து கண்காணித்தல் மற்றும் அதிக அளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, J-11 கண்ணகிநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (29.08.2019) அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், கண்ணகி நகர், ஒக்கியம்பேட்டை பாலம் அருகில் ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு நான்கு நபர்கள் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

அதன் பேரில் மேற்படி இடத்தில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 1.நரேஷ்பிரதான், வ/30, த/பெ.முகுந்பிரதான், பிளாக்-4, பிரபஞ்சம் அபார்ட்மென்ட், மாதா கோவில் தெரு, ஒக்கியம்பேட்டை 2.பரத்பாரிக், வ/28, த/பெ.தாமோதர்பாரிக், பிளாக்-4, பிரபஞ்சம் அபார்ட்மென்ட், மாதா கோயில் தெரு, ஒக்கியம்பேட்டை 3.பாய்தர்ஷா, வ/39, த/பெ.அகிலாசரண்ஷா, எண்.5/89, திருவள்ளுர் சாலை, ஒக்கியம்பேட்டை, 4.கார்த்திக்பாண்டியா, வ/39, த/பெ.பத்மலூசன் பாண்டியா, எண்.5/89, திருவள்ளுர் சாலை, ஒக்கியம்பேட்டை ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ 700 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட நான்கு நபர்களும் ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் இவர்கள் மேற்படி இடத்தில் தங்கிருந்து தனியார் நிறுவனங்களில் சமையல் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 4 நபர்களும் விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here