ஓட்டல் ஊழியரின் செல்போனை திருடிச் சென்ற வடமாநில நபர் கைது- செல்போன் பறிமுதல்

0
187

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த புகழேந்தி, வ/24, த/பெ.பொன்னுசாமி என்பவர் சென்னை, அடையாறு எல்.பி.சாலையிலுள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். கடந்த 19.9.2019 அன்று மேற்படி ஓட்டலில் வேலைக்கு சென்ற புகழேந்தி வேலை முடித்து மாலை வீட்டிற்கு செல்லும்போது, அவரது ரூ.14,000/- மதிப்புள்ள சாம்சங் செல்போனை யாரே திருடிச் சென்றுவிட்டிருந்தனர். புகழேந்தி இது குறித்து J-5 சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சாஸ்திரி நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மேற்படி ஓட்டலில் விசாரணை செய்தும், அங்கு பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை ஆய்வு செய்தும், மேற்படி செல்போனை திருடிய நிக்ஸி கிபன் வ/31, த/பெ.தங்கலாம் கிபன், மால்கம் கிராமம், மணிப்பூர் என்பவரை நேற்று (23.9.2019) கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரரின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், குற்றவாளி நிக்ஸி கிபன் மேற்படி ஓட்டலில் 19.9.2019 அன்று புதிதாக வேலைக்கு சேர்ந்ததும், சிசிடிவி கேமரா பதிவில் புகழேந்தியின் செல்போனை குற்றவாளி எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.
விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here