ஏழுகிணறு பகுதியில் வீட்டில் குட்கா மற்றும் ஹான்ஸ் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 நபர்கள் கைது. 62 கிலோ குட்கா மற்றும் ஹான்ஸ் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

0
373

சென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துக்களான மாவா, பான் மசாலா, ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் தயாரிப்பவர்களையும், விற்பவர்களையும், கண்காணித்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொண்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சி-3 ஏழுகிணறு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (04.9.2019), அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ஏழுகிணறு, வால்டாக்ஸ் ரோடு, எண்.79 என்ற முகவரியில் உள்ள வீட்டை ரகசியமாக கண்காணித்த போது, அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் ஹான்ஸ் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மேற்படி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1.சுரேஷ், வ/40, த/பெ.வாசு, எண்.108இ, வால்டாக்ஸ் ரோடு, சென்னை 2.திவாராம், வ/53, த/பெ.முத்துராஜ், எண்.30/1, வால்டாக்ஸ் ரோடு, ஏழுகிணறு அவரது மகன் 3.கணபதி, வ/25, த/பெ.திவாராம், எண்.30/1, வால்டாக்ஸ் ரோடு, ஏழுகிணறு ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 62 கிலோ மற்றும் ஹான்ஸ் மற்றும் குட்கா புகையிலைப்பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட மூவரும் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை ஏழுகிணறு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here