ஏழுகிணறு பகுதியில் பெண்ணிடம் செல்போன் பறித்த பழைய குற்றவாளிகள் இருவர் கைது. 1 செல்போன் பறிமுதல்

0
106

சென்னை, கொருக்குப்பேட்டை, தர்மராஜா கோயில் தெரு, எண.31/14 என்ற முகவரியில் சுஜாதா, வ/25, த/பெ.கோட்டீஸ்வரராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 30.04.2019 அன்று மின்ட் புதிய பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு இருசக்கரவாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் மேற்படி சுஜாதாவின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். இது குறித்து சுஜாதா சி-3 ஏழுகிணறு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
சி-3 ஏழுகிணறு காவல் நிலைய போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்தனர், மேலும் சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்து மேற்படி செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட 1.ரவிஅரவிந்த், வ/23, த/பெ.கிருஷ்ணமூர்த்தி, எண்.8/14, நடராஜ் கிராமணி தெரு, திருவொற்றியூர் 2.மணி (எ) ஓசை மணி, வ/22, த/பெ.ஞானமணி, எ.12, வெங்கடேசபுரம் 1வது தெரு, கன்னிகாபுரம், புளியந்தோப்பு ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட ரவி (எ) அரவிந்த் மீது எச்-8 திருவொற்றியூர் காவல் நிலையத்தில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் எச்-3 தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் செயின் பறிப்பு வழக்கும் உள்ளது. மற்றொரு குற்றவாளியான மணி (எ) ஓசை மணி மீது பி-1 புளியந்தோப்பு காவல் நிலையத்தில் 1 கொலை வழக்கும், பி-2 ஓட்டேரி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கும் உள்ளதும் தெரியவந்தது. மேலும் இவர் ஒரு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here