எஸ்பிளனேடு பகுதியில் சட்டவிரோதமாக மாவா விற்பனை செய்த 3 பேர் கைது. 4.5 கிலோ மாவா, பணம் 35,390/- மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்

0
147

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, B-2 எஸ்பிளனேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (15.03.2020) அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், மண்ணடி, பிரகாசம் சாலை, மெட்ரோ ரயில் நிலையம் அருகில் கண்காணித்த போது அங்கு 3 பேர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா புகையிலை பொருட்களை இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்து ரகசியமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

அதன்பேரில் மேற்படி இடத்தில் தடை செய்யப்பட்ட மாவா பாக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த 1.விஸ்வநாதன்,வ/19, த/பெ.ஏழுமலை, எண்.33, பேரக்ஸ் ரோடு, ஏழுகிணறு, சென்னை, 2.விக்னேஷ், வ/19, த/பெ.உதயகுமார், எண்.2, ஏகவள்ளி அம்மன் கோயில் சந்து, பிராட்வே, சென்னை, 3.ராஜேஷ், வ/30, த/பெ. ஆறுமுகம், எண்.13, 3வது கடற்கரை சாலை, சென்னை ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4.5 கிலோ எடை கொண்ட மாவா பாக்கெட்டுகள், பணம் ரூ.35,390/- மற்றும் மேற்டி இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 3 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here