எஸ்பிளனேடு பகுதியில் உள்ள தனியார் மேன்சனில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 நபர்கள் கைது. பணம் ரூ.30,000/- மற்றும் 4 சீட்டுகட்டுகள் பறிமுதல்

0
492

சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் உத்தரவிட்டதன் பேரில் அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து வருகின்றனர்.
அதன்பேரில், B-2 எஸ்பிளனேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று (13.12.2019), கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் பிராட்வே, பிரான்சிஸ் ஜோசப் தெருவில் உள்ள தனியார் மேன்சனை சோதனை செய்தபோது அங்கு சிலர் பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதன்பேரில் மேற்படி மேன்சனில் சூதாட்டத்தில் ஈடுபட்ட மேன்சன் மேலாளர் 1.கிருஷ்ணமூர்த்தி, வ/52, த/பெ.அருணாசலம் மோகன், எண்.10/20, முருகேசன் தெரு, சூளை 2.துரைராஜ், வ/33, த/பெ.ராமசாமி, எண்.9, அம்மன் கோயில் தெரு, வால்டாக்ஸ் ரோடு 3.நரேஷ் (எ) குட்டி நரேஷ், வ/28, த/பெ.லோகு, எண்.8/36, மீனாம்மாள் நகர், 52வது தெரு, கொருக்குப்பேட்டை 4.அரவிந்தகுமார், வ/25, த/பெ.தேவேந்திரன், கொருக்குப்பேட்டை 5.செல்வம், வ/42, த/பெ. ஆனந்த், கொருக்குப்பேட்டை 6.ராஜா, வ/32, த/பெ.அண்ணாமலை, கொருக்குப்பேட்டை 7.பாபு (எ) உமாபதி, வ/30, த/பெ.குமரவேல், கொருக்குப்பேட்டை 8.கார்த்திக், வ/30, த/பெ.எழில்அரசன், சூளை ஆகிய 8 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.30,000/- பணம் மற்றும் 4 சீட்டுகட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here