எழும்பூர் மற்றும் செம்மஞ்சரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது. 2.5 கிலோ கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்

0
200

சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து, அதிக அளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக F-2 எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (4.12.2019) மதியம் ரோந்து பணியிலிருந்த போது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், எழும்பூர், ஆல்பர்ட் திரையரங்கம் அருகில் கண்காணித்தபோது, அங்கு ஒருவர் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்து ரகசியமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில், மேற்படி இடத்தில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த திலீப்குமார், வ/26, த/பெ. கிருஷ்ணமூர்த்தி, எண்.196, எஸ்.எம்.நகர், பல்லவன் சாலை, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ 300 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல, J-10 செம்மஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (04.12.2019) காலை செம்மஞ்சேரி ஆலமரம் பேருந்து நிறுத்தம் அருகே ரகசியமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெக்குபதான், வ/40, த/பெ.கொந்தைபதான் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here