எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் அழகு நிலையத்தில் புகுந்து பெண்ணை கத்தியால் தாக்கிய வழக்கில் 4 நபர்கள் கைது. 1 கத்தி பறிமுதல்

0
29

சென்னை, எம்.ஜி.ஆர் நகர், புகழேந்தி தெரு, எண்.20 என்ற முகவரியில் பிருந்தா வ/31, க/பெ.பழனி, என்பவர் வசித்து வருகிறார். பிருந்தாவின் கணவர் 5 வருடத்திற்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் பிருந்தா கடந்த இரண்டு வருடமாக வெங்கட்ராமன் சாலை, சிவன் முத்து சாலை சந்திப்பு, சூளைப்பள்ளம் என்ற முகவரியில் பூஜா பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச்சேர்ந்த திலீபன் (34) என்பவருக்கும் தொடர்பு இருந்துள்ளது. சமீபகாலமாக திலீபனின் நடவடிக்கைகள் பிடிக்காததால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிருந்தா, திலீபனுடனான தொடர்பை துண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த திலீபன் நேற்று (08.07.2019) மாலை 6.00 மணியளவில் தனது நண்பர்களான வேலு, கோகுல், ஆனந்த் ஆகிய மூவரை அழைத்துக்கொண்டு பியூட்டி பார்லர் சென்று பிருந்தாவுடன் தகராறு செய்துள்ளார். மேலும் திலீபன் பிருந்தாவின் முகத்தில் கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தனது நண்பர்களுடன் தப்பியுள்ளார். காயமடைந்த பிருந்தா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இது குறித்து பிருந்தா ஆர்-10 எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
ஆர்-10 எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.தீலிபன், வ/34, த/பெ.மோகன், எண்.12, தியாகிகுப்பன் தெரு, எம்.ஜி.ஆர் நகர் 2.ஆதிவேலு, வ/32, த/பெ.பொன்ராஜ் எண்-99, பச்சையப்பன் 2வது தெரு, எம்.ஜி.ஆர் நகர் 3.கோகுல், வ/31, த/பெ.சேகர், எண்-12/3, ராணி அண்ணா நகர், கே.கே. நகர், சென்னை 4.ஆனந்த், வ/30, த/பெ.ராஜேந்திரன், எண்-4, அன்பழகன் தெரு, எம்.ஜி.ஆர் நகர் ஆகிய நான்கு நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட நான்கு நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here