எண்ணூர் பகுதியில் நிறுத்தியிருந்த லாரியின் பேட்டரிகளை திருடிய 2 பேர் கைது- 2 பேட்டரிகள் பறிமுதல்

0
21

சென்னை, எண்ணூர், அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்த சுரேஷ், வ/40, த/பெ.பாண்டியன் என்பவருக்கு சொந்தமான TN22 BF 3677 என்ற பதிவெண் கொண்ட டாரஸ் லாரியை கடந்த 01.12.2019 அன்று மாலை எர்ணாவூர், ஆல் இந்தியா ரேடியோ நகர் சாலையில் நிறுத்தியிருந்தபோது, யாரோ மர்ம நபர்கள் மேற்படி லாரியின் பேட்டரிகள் -2 ஐ யாரோ திருடிச் சென்றுவிட்டனர். இது குறித்து சுரேஷ் M-5 எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
எண்ணூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்தும், மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பாபு, வ/31, த/பெ.மோகன், எண்.12, 58வது பிளாக், சுனாமி குடியிருப்பு, எர்ணாவூர், சென்னை மற்றும் செல்லதுரை, வ/31, த/பெ.இருசன், எண்.3, சுந்தரவிநாயகர் 6வது தெரு, வியாசர்பாடி, சென்னை ஆகிய 2 பேரை நேற்று (02.12.2019) கைது செய்தனர். அவர்களிடமிருந்து மேற்படி லாரியின் பேட்டரிகள்-2 பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 2 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here