எண்ணூர் அருகே 16 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்ற நபர் கைது

0
186

சென்னை, எர்ணாவூர், சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 19.10.2019 அன்று சிறுமி துணிகளை காய வைப்பதற்கு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற போது, அங்கு குடி போதையிலிருந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜா என்பவர் சிறுமியின் துப்பாட்டவை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றுள்ளார். சிறுமியின் சத்தம்கேட்டு, சிறுமியின் தாய் மொட்டை மாடிக்கு சென்று பார்த்த போது ராஜா அங்கிருந்து தப்பி ஒடியுள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் W-34 எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், (POCSO Act – 2012 (Protection of Children from Sexual Offences) சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
W-34 எண்ணூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜா, வ/55, த/பெ.முத்தாண்டி, எண்.58, சுனாமி குடியிருப்பு, எர்ணாவூர் என்பவரை கைது செய்தனர்.
விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட ராஜா, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here