இருசக்கர வாகனங்களை திருடிய நபர் கைது. 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

0
435

சென்னை, கொண்டித்தோப்பு, முத்து கிருஷ்ணன் தெரு, எண்.23/28 என்ற முகவரியில் வசிக்கும் புத்தாராம், வ/52, த/பெ.ராஜு என்பவர் கடந்த 17.11.2019 அன்று மதியம் அவரது வீட்டின் முன்பு அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது யாரோ அவரது இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுவிட்டிருந்தனர். இது குறித்து புத்தாராம் C-3 ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஏழுகிணறு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்தும், சம்பவ இடத்தினருகில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும் மேற்படி இருசக்கர வாகனத்தை திருடிய குற்றவாளி மணிகண்டன், வ/25, த/பெ.மாரி, எண்.92, 6வது தெரு, போஜராஜன் நகர், கீரைத்தோட்டம், பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை என்பவரை நேற்று (20.01.02020) கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரரின் இருசக்கர வாகனம் உட்பட 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் கைது செய்யப்பட்ட மணிகண்டன், ஏழுகிணறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட மணிகண்டன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here