இராயப்பேட்டையில் நடந்து சென்ற நபரிடம் பணம் பறித்துச் சென்ற 2 பேர் கைது. பணம் ரூ.200/- பறிமுதல்

0
351

செஇராயபேட்டை, பீட்டர்ஸ் சாலை, சங்கம் தேநீர் விடுதி, எண்.141 என்ற முகவரியில் முகமது ரபீக், வ/26, த/பெ.காதர் என்பவர் வசித்து வருகிறார். முகமது ரபீக் நேற்று (11.10.2019) மதியம் சுமார் 02.30 மணியளவில், பீட்டர்ஸ் சாலை மேம்பாலம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த 2 பேர் முகமது ரபீக்கிடம் முகவரி கேட்பது போல நடித்து, திடீரென அவரின் சட்டையை பிடித்து பணம் கேட்டு மிரட்டினர். முகமது ரபீக் பணம் தர மறுக்கவே, 2 பேரும் முகமது ரபீக் சட்டை பையில் இருந்த பணம் ரூ.200/- பறித்துக் கொண்டு தப்பியோடினர்.
உடனே, முகமது ரபீக் சத்தம் போட்டுக் கொண்டே அவர்களை துரத்திச் சென்றபோது, சற்று தொலைவில் கண்காணிப்பு பணியிலிருந்த E-2 இராயப்பேட்டை காவல் நிலைய போலீசார் துரத்திச் சென்று 2 பேரையும் பிடித்து E-2, இராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1.தஸ்தகீர், வ/24, த/பெ.சலீம், எண்.32, நீலம் பாஷா தர்கா, திருவல்லிக்கேணி, சென்னை-5, 2.முகமது நதீம், வ/20, த/பெ.முகமது அப்துல் சலீம், எண்.179/2. மேற்கு நிஜாமுதீன் தெரு, புது டில்லி ஆகிய என்பதும், முகமது ரபீக்கிடம் பணம் பறித்துக் கொண்டு தப்பியதும் தெரியவந்தது.
அதன்பேரில், குற்றவாளிகள் தஸ்தகீர் மற்றும் முகமது நதீம் ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து பணம் ரூ.200/- பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here