இரண்டு லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்…!

0
470

திருப்பூரில் திருமுருகன் பூண்டி பகுதியில் இரண்டு லட்சம் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் ராமநாதன்.இவர் திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார்.

இதனையடுத்து ராமனாதன் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது மாடியில் கள்ள நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிரகாஷுக்கு சொந்தமான வீட்டை ராமநாதன் விலைக்கு வாங்கியதாகவும், பிரகாஷ் வீட்டை காலி செய்ய வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் ராமநாதன் வீட்டில் கள்ளநோட்டுகளை வைத்து ராமநாதனை பழிவாங்க திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here