இரண்டாம் நிலைக் காவலர்கள் எழுத்து தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

0
475

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் காவல், சிறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் காலியாகவுள்ள 8826 + 62 (பின்னடைவு காலிப்பணியிடங்கள்) நிரப்பிடுவதற்கான எழுத்துத் தேர்வினை கடந்த 25.08.2019 அன்று 32 மாவட்டத் தேர்வு மையங்களில் நடத்தியது. இத்தேர்வில் கலந்து கொள்வதற்கு 3,22,076 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டன. அடுத்த கட்டத் தேர்வான உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு, உடற்திறன் போட்டி மற்றும் அசல் சான்றிதழ் சரிபார்த்தல் 1:5 விகிதத்தில் கலந்து கொள்வதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் இக்குழும இணைய தளம் www.tnusrbonline.org -ல் 26.09.2019 அன்று வெளியிடப்பட்டுள்ளன.
தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான அழைப்புக் கடிதம் விரைவில் இக்குழும இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் அவ்வழைப்புக் கடிதத்தை உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு, உடற்திறன் போட்டி மற்றும் அசல் சான்றிதழ் சரிபார்த்தலில் கலந்து கொள்வதற்கு முன்னர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கூடுதல் காவல்துறை இயக்குநர்/உறுப்பினர்,
த.நா.சீ.ப. தேர்வுக் குழுமம்,
சென்னை -08.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here