ஆவடி பகுயில் காரில் வந்து கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன்கள் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற இளஞ்சிறார் உட்பட 5 பேர் கைது. செல்போன்கள்-2 மற்றும் கார் பறிமுதல்

0
984

பெங்களூரைச் சேர்ந்த சுபியான், வ/31, த/பெ.அக்பர் பாஷா மற்றும் அஜ்மல், வ/30, ஆகியோர், சென்னையில் தங்கி, சென்னை, ஆவடி, சிட்கோ, காட்டூரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். சுபியான் மற்றும் அஜ்மல் ஆகியோர் கடந்த 02.9.2019 அன்று இரவு சுமார் 10.30 மணிக்கு பணி முடித்து, நிறுவனத்தின் வெளியே நடந்து சென்று கொண்டிருந்தபோது, பொலீரோ காரில் வந்த 5 பேரில் 3 பேர் காரிலிருந்து இறங்கி வந்து சுபியானிடம் முகவரி கேட்பது போல நடித்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுபியான் மற்றும் அஜ்மலிடம் பணம் கேட்டுள்ளனர். 2 பேரும் பணம் தர மறுக்கவே, 3 பேரும் சுபியான் மற்றும் அஜ்மல் வைத்திருந்த 2 செல்போன்கள் மற்றும் பணம் ரூ.1,500/- பறித்துக் கொண்டு மேற்படி பொலீரோ காரில் ஏறி தப்பிச் சென்றனர்.
பின்னர் இது குறித்து இருவரும் T-7 ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தும், மேற்படி காரின் பதிவு எண்ணை (TN18 P 0016) கண்டுபிடித்தும், மேற்படி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 1.சுரேஷ், வ/23, த/பெ.பாபு, எண்.5/494, அம்பேத்கர் தெரு, திருமாலடிபாதம், செங்குன்றம், 2.பழனி பாரதி, வ/22, த/பெ.மணி, எண்.5/496ஏ, அம்பேத்கர் தெரு, திருமாலடிபாதம், செங்குன்றம், 3.அஜித்குமார், வ/20, த/பெ.ரவிகுமார், எண்.5/506, அம்பேத்கர் தெரு, திருமாலடிபாதம், செங்குன்றம், 4.வசந்தகுமார், வ/19, த/பெ.கிருஷ்ணன், எண்.5/505, அம்பேத்கர் தெரு, திருமாலடிபாதம், செங்குன்றம், 5.அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது இளஞ்சிறார் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரர்களின் செல்போன்கள்-2 மற்றும் மேற்படி பொலீரா கார் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட சுரேஷ் மீது சோழவரம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்ளது தெரியவந்தது.
விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 4 பேர் சிறையிலும், இளஞ்சிறார் அரசு கூர்நோக்கு இல்லத்திலும் சேர்க்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here