ஆர்.கே.நகர் பகுதியில் நிறுவனத்தின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 2 இளஞ்சிறார்கள் உட்பட 3 பேர் கைது- மடிக்கணினி மற்றும் பணம் ரூ.26,000/- பறிமுதல்

0
80

தண்டையர்பேட்டை, நேதாஜி நகர், 5வது தெருவைச் சேர்ந்த மணிகண்டன், வ/32, த/பெ.தட்சிணாமூர்த்தி என்பவர் நேதாஜி நகர், 6வது தெருவில் வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். மணிகண்டன் கடந்த 09.7.2020 அன்று இரவு மேற்படி நிறுவனத்தை பூட்டிவிட்டுச் சென்று மறுநாள் (10.7.2020) காலை பார்த்தபோது, நிறுவனத்தின் லாக்கரில் வைத்திருந்த வசூல் பணம் ரூ.1,68,000/- மற்றும் மடிக்கணினியை யாரோ திருடிச் சென்றுவிட்டிருந்தனர். இது குறித்து மணிகண்டன், H-6 ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் தீவிர விசாரணை செய்து, மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மணி (எ) கஞ்சா மணி, வ/22, த/பெ.கந்தன், எண்.25/33, ‘ஏ’ பிளாக், 8வது தெரு, அன்னை சத்யா நகர், கொடுங்கையூர், 16 வயது மற்றும் 17 வயது இளஞ்சிறார்கள் 2 பேர் என மொத்தம் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் ரூ.26,000/- மற்றும் மடிக்கணினி -1ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் கைது செய்யப்பட்ட மணி (எ) கஞ்சா மணி மீது P-6 கொடுங்கையூர் மற்றும் சில காவல் நிலையங்களில் ஒரு கொலை முயற்சி வழக்கு மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட 3 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி மணி (எ) கஞ்சா மணி சிறையிலும், இளஞ்சிறார்கள் 2 பேர் அரசு கூர்நோக்கு இல்லத்திலும் சேர்க்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here