ஆயுதபூஜை பண்டிகைகளில் திருஷ்டி பூசணிக்காய்களை சாலைகளில் உடைக்க வேண்டாம் – சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு

0
975

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு பெரும்பாலான பொதுமக்கள் வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் வாகனங்கள் போன்றவற்றிற்கு பூஜைகள் செய்து திருஷ்டி பூசணிக்காய்கள் உடைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

பலசமயங்களில், சாலைகளின் நடுவே திருஷ்டி பூசணிக்காய்களை உடைத்து அப்படியே விட்டுச் செல்வதால், வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்துக்கள் ஏற்படுவதும் அவ்வாறு விழும் பொழுது பின்னால் வரும் வாகனங்கள் அவர்கள் மீது மோதி ஆபத்து ஏற்ப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் திருஷ்டி பூசணிக்காய்களை உடைக்க வேண்டாம் எனவும், பாதுகாப்பான முறையில் தங்களது பூஜைகளை செய்யவும், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், திருஷ்டி பூசணிக்காய்களை சாலைகளில் உடைத்து விபத்து ஏற்ப்பட்டால் , விபத்து ஏற்பட காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்கி , விபத்தில்லா ஆயுதபூஜை பண்டிகையை கொண்டாட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here