ஆதம்பாக்கத்தில் முன்விரோதம் காரணமாக மீன் வெட்டும் கத்தியால் தாக்கிய நபர் கைது. கத்தி பறிமுதல்

0
430

சென்னை, ஆதம்பாக்கம், டாக்டர்.அம்பேத்கர் நகர் 7வது தெரு, எண்.1804 என்ற முகவரியில் வசிக்கும் மாசிலாமணி, வ/36, த/பெ.வேலு என்பவர் காசிமேடு பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். மாசிலாமணிக்கும் காசிமேட்டில் மீன் வியாபாரம் செய்யும் அறிவழகன் என்பவருக்கும் மீன் வியாபாரம் செய்வது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், மாசிலாமணி நேற்று (04.12.2019) காலை காசிமேடு மீன் வாங்கும் மேடவாக்கம், ஜெயலஷ்மி திரையரங்கம் அருகே நடந்து சென்றபோது, அங்கு வந்த அறிவழகனுக்கும் மாசிலமாணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அறிவழகன் தான் மறைத்து வைத்திருந்த மீன் வெட்டும் கத்தியால் மாசிலாமணியை தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். இதில் வெட்டுக்காயம் அடைந்த மாசிலாமணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று S-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
மாசிலாமணி கொடுத்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில், எதிரி அறிவழகன் மாசிலாமணியை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. அதன்பேரில், காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு குற்றவாளி அறிவழகன், வ/48, த/பெ.ராமலிங்கம், எண்.6 தில்லை கங்கா நகர், 41வது தெரு, நங்கநல்லூர், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட அறிவழகன், விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here