ஆட் டோவில் பயணி தவறவிட்ட தங்கநகைகளை அபகரித்த ஆட்டோ ஓட்டுநர் கைது. 9 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

0
78

தென்காசி, சிவந்தி நகரில் வசித்து வரும் சங்கீதாமாலா, பெ/வ.44, க/பெ.மைக்கேல் சேவியர் என்பவர் அப்பகுதியிலுள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சங்கீதா மாலா சென்னையிலுள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 08.9.2019 அன்று காலை சென்னைக்கு வந்து, சென்னை, போரூரிலிருந்து அவ்வழியே வந்த ஒரு ஆட்டோவில் ஏறி வேலப்பன் சாவடியிலுள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து, சங்கீதாமாலா தான் கொண்டு வந்த 9 சவரன் நகைகள் அடங்கிய பையை மேற்படி ஆட்டோவில் தவறவிட்டது தெரியவந்ததன் பேரில், சங்கீதாமாலா T-5 திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
திருவேற்காடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவுகளை ஆய்வு செய்து, மேற்படி ஆட்டோவின் ஓட்டுநர் சரவணன், 43 என்பவரை நேற்று (12.11.2019) பிடித்து விசாரணை செய்தபோது, சரவணன் மேற்படி நகைகள் அடங்கிய பையை திரும்ப ஒப்படைக்காமல் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், மேற்படி நகைகளை அபகரித்த ஆட்டோ ஓட்டுநர் சரவணன், வ/43, த/பெ.சாய்நாதன், எண்.10, தங்கம் காலணி, அண்ணா நகர் (மேற்கு), சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 9 சவரன் தங்க நகைகள் அடங்கிய பை பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட சரவணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here