அரும்பாக்கம் காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற பழைய மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக வழங்கிய ரூ.1 லட்சத்திற்கான காசோலையை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனிடம் வழங்கினார்

0
78

கே-8 அரும்பாக்கம் காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற பழைய மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல பிரிவில், குழந்தைகள் விளையாட, விளையாட்டு திடல் அமைப்பதற்காக வழங்கிய ரூ.1 லட்சம் ரூபாய்கான காசோலையை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் இன்று (10.08.2020) ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர். பாலாஜி அவர்களிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் நல பிரிவு  துறைத்தலைவர் டாக்டர்.கணேஷ், அரும்பாக்கம் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற Scout Master திரு.கிருஷ்ணமூர்த்தி  மற்றும் சமூக சேவையாளர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here