அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்த கல்லூரி பேராசிரியர் கைது

0
24

சென்னை, கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், வ/45, என்பவரிடம் 2011ம் ஆண்டு அவருக்கு தெரிந்த நபரான கல்லூரி பேராசிரியர் திருமலை என்பவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய மணிகண்டன் 2011ம் ஆண்டு ரூ.15 லட்சம் பணத்தை திருமலையிடம் கொடுத்துள்ளார். ஆனால் திருமலை சொன்னதுபோல இதுவரையில் அரசு வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் சில நாட்களுக்கு முன்பு திருமலையிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டபோது, பணத்தை திருப்பி தரமுடியாது என திருமலை மிரட்டி அனுப்பியுள்ளார்.ஆகவே, இது குறித்து மணிகண்டன் J-6 திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில், திருமலை என்பவர் ஒரு கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து வருவதும், மணிகண்டனிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததும் தெரியவந்தது.
அதன்பேரில், வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த திருமலை, வ/46, த/பெ.முத்துமணி, எண்.18, மேற்கு டேங்க் தெரு, திருவான்மியூர், சென்னை என்பவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட திருமலை விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here