அரசியல் வாழ்வில் ‘அப்பழுக்கற்றவராய்’திகழ்ந்து வரும் கழகத் தலைவர் தளபதி குறித்து பேச ஊழலில் ஊற்றுக் கண்ணான வேலுமணியே உனக்கு என்ன அருகதை இருக்கிறது?

0
584

மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ., அறிக்கை

கொள்ளைக் கும்பலின் தலைவராக”  உள்ளாட்சி  அமைப்புகளில் கொள்ளையடித்து, மக்கள் வரிப் பணத்தை தனது சொந்த கஜானாவையும் – தனக்கு பதவி கொடுத்தவர்களின் கஜானாவையும் நிரப்பி வரும் உள்ளாட்சி துறை அமைச்சர் திரு.எஸ்.பி. வேலுமணிக்கு எங்கள் கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் பற்றி குறை கூறுவதற்கு அருகதையும் இல்லை – அடிப்படை தகுதியும் இல்லை. கண்ட  திசை எல்லாம் கும்பிடு போட்டு பதவி வாங்கி –  மண்டியிட்டு மடிப்பிச்சை ஏந்தி – இப்போது அரசு  பணம் தானே நம் இஷ்டத்திற்கு  கொள்ளையடிப் -போம்  என்று உள்ளாட்சி அமைப்பு நிர்வாகத்தை  குட்டிச் சுவராக்கி –  ஊரக வளர்ச்சி  மற்றும் நகர்ப் புற  வளர்ச்சியை சாக்கடையில்  மிதக்க விட்டுள்ள  திரு.வேலுமணிக்கு எங்கள் கழகத் தலைவரைப்  பார்த்து “சுட்டு விரலை” நீட்டக் கூட தகுதியில்லை.

“ஆயிரம், லட்சம், கோடியிலும்” உள்ள பல “ஜீரோக்களை” தினமும் உள்ளாட்சி துறையில் அடிக்கும்  லஞ்சத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் திரு.வேலுமணி வாய்துடுக்காக அடித்த கொள்ளைப்பணத்தில்அமர்ந்திருக்கும் ஆணவத்தில் எங்கள் கழகத்  தலைவரைப் பார்த்து “ஜீரோ” என்று விமர்சிப்பது கேடுகெட்ட அரசியல்வாதி எல்லாம் அமைச்சர் பொறுப்பில் இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. “உள்ளாட்சி நிர்வாகத்தில்” ஜீரோ, நேர்மையில்  “ஜீரோ”, வெளிப்படையான டெண்டரை  விடுவதில்  ஜீரோ என்று பல ஜீரோக்களை வாங்கி, ஊழலிலும், பணம் சுருட்டுவதிலும் -“வேறு விவகாரங்களிலும்ஹீரோவாக இருக்கும் வேலுமணிக்கு ஒரு நாகரீகமான அறிக்கையைக் கூட விடத் தெரியவில்லை  என்பது தமிழக அமைச்சரவைக்கு வெட்க கேடு.

“அடிமையாக” இருந்து ஆட்சி செய்வது எளிது. “ஊழல் மட்டுமே” எங்கள் வேலை என்று ஆட்சி  செய்வதும் எளிது. இப்படி கெஞ்சிக்கூத்தாடி -மாதம் ஒரு முறை டெல்லிக்குச் சென்று மத்திய  மந்திரிகளிடம் காலில் விழுந்து – சாஷ்டாங்கமாக கும்பிட்டு “எங்களை காப்பாற்றுங்கள்” என்று  அனைத்தையும் சரண்டர் செய்து விட்டு ஆட்சி  செய்வது அதை விட எளிது – அப்படி தமிழக நலனுக்கும், தமிழக உரிமைகளுக்கும் கேவலமான ஒரு ஆட்சியை நடத்தி வரும் இந்த ஆட்சியைப் பார்த்து “அண்ணன் எடப்பாடியார் சிறப்பாக ஆட்சி செய்கிறார்” என்று அமைச்சர் திரு வேலுமணி போவது –  சனிப் பிணம் தனியாகப் போகாது என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது. உள்ளாட்சி துறை  அமைப்பில் நடைபெறும் வண்ணமிகு மெகா  ஊழல்களில் எனக்கு மட்டும் பொறுப்பல்ல – “அண்ணன் எடப்பாடியாருக்கும்” பொறுப்பு என்று அமைச்சர் பகிரங்கமாகக் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

தான் ஒரு சூரப்புலி போல் அறிக்கை விடுத்துள்ளார். தி.மு.க. மற்றும் அறப்போர் இயக்கம் கொடுத்த  புகார்களில் உள்ள 349 ஒப்பந்தங்கள் தொடர்பான  இமாலய ஊழலை விசாரிக்க அனுமதி கொடுத்து உள்ளது அ.தி.மு.க. அரசுதான். சென்னை மாநகராட்சியில் 76 கான்டிராக்ட், கோவை மாநகராட்சியில்  244 கான்டிராக்ட், திருப்பூர் மாநகராட்சியில் 4  கான்டிராக்ட், சேலம் மாநகராட்சியில் 2 கான்டிராக்ட், பொதுப்பணித் துறையில் 22  கான்டிராக்ட்  ஆகியவற்றை விசாரித்துக் கொண்டிருக்கிறோம்  என்று கூறியிருப்பது லஞ்சஊழல் தடுப்புத் துறைதான். ஒரே ஐ.பி. அட்ரஸில் இருந்து இந்த டெண்டர்களை எல்லாம் போட்டிருப்பது திரு எஸ்.பி.வேலுமணியின் பினாமி கம்பெனிகள்தான். புகார்களுக்கு  பதில் சொல்லுங்கள் என்று அனுப்பப்பட்ட கோர்ட் நோட்டீஸை வாங்காமல் – ஓடிஒளிந்தது சாட்சாத் அமைச்சர் திரு எஸ்.பி.வேலுமணிதான். நோட்டீஸை வாங்கவில்லை என்றால் பத்திரிகையில் தான் விளம்பரம் கொடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்திடம் குட்டு வாங்கியவர் அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணிதான். எட்டு மாதங்கள் நோட்டீஸுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி –  திருவிழா கூட்டத்தில் தொலைந்து போனவர்  போல் முச்சந்தியில் முழி பிதுங்கி நின்றது அமைச்சர் திரு எஸ்.பி.வேலுமணிதான்.

“தயவுசெய்து பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்து விடாதீர்கள். அமைச்சரை பதில்  சொல்லச்  சொல்கிறேன்” என்று கூறும் அளவிற்கு உயர்நீதி மன்றத்தில் கூடுதல் அட்வகேட் ஜெனரலுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கியவர் திரு வேலுமணிதான்.குற்றச்சாட்டுகளுக்கு நவம்பர் 1-ஆம் தேதிக்குள்  பதில் கொடுங்கள் என்று உயர்நீதிமன்றத்தின்  இறுதி எச்சரிக்கைக்கு உள்ளானவரும் திரு வேலு மணிதான். சூடு சொரணை தன்மானம் உள்ளவராக இருந்தால் திரு.வேலுமணி தன்மீது ஊழல் விசாரணைக்கு அ.தி.மு.க. அரசு அனுமதி கொடுத்த  அன்றே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருக்க வேண்டும். அப்படி ராஜினாமா செய்து  விட்டால் ஊழல் வழக்கில் ஏதாவது ஒரு  சிறையில் களி திண்ண வேண்டியதிருக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here