அம்பத்தூர் பகுதியில் லோடு வாகன ஓட்டுநரை தாக்கி செல்போன் மற்றும் பணம் பறித்த 3 பேர் கைது. 1 கார் , 1 செல்போன் மற்றும் ரூ.200/- பறிமுதல்

0
503

சென்னை, செங்குன்றம், காரணோடை, பங்களாமேட்டு தெரு, என்ற முகவரியில் முத்துக்குமார் வ/38, த/பெ, ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 02.12.2019 அன்று இரவு 11.30 மணியளவில் செங்குன்றம் சாலை கள்ளிக்குப்பம், ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகே தனது TN-18-BA-0518 Eicher லோடு வாகனத்தில் அம்பத்தூரிலிருந்து செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த TN-02-AD-3666 என்ற பதிவெண் கொண்ட Ford fista காரில் வந்த 3 நபர்கள் மேற்படி முத்துக்குமாரின் லோடு வாகனத்தில் மோதுவது போல வந்துள்ளனர். உடனே முத்துக்குமார் சத்தம் போட்டுள்ளார்.

இதனால் இருதரப்பினருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஆத்திரத்தில் காரில் வந்த 3 நபர்களும் மேற்படி முத்துக்குமாரை தாக்கிவிட்டு அவரிடமிருந்த செல்போன் மற்றும் ரூ.1200/- பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். இது குறித்து முத்துக்குமார் T-1 அம்பத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
T-1 அம்பத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்ப்டட 1.ஜீவா (எ) ஜீவானந்தம், வ/23, த/பெ, மூர்த்தி எண்-2, பஜனை கோவில் தெரு, மேனாம்பேடு, அம்பத்தூர் 2.முனுசாமி, வ/25, த/பெ, விஜி, எண்-33, 3வது தெரு, இந்தியன் வங்கி காலனி, அம்பத்தூர் 3.முகேஷ் வ/21, த/பெ.முரளி, எண்-5/3, மாடத்தெரு, கங்கை நகர், கள்ளிக்குப்பம், அம்பத்தூர் ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கார், 1 செல்போன் மற்றும் ரூ.200 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட ஜீவா (எ) ஜீவானந்தம் மீது திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here