அமைந்தகரை பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த 2 பேர் கைது. 119 மதுபாட்டில்கள் பறிமுதல்

0
169

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, K-3 அமைந்தகரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (03.12.2019) கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அமைந்தகரை, என்.எஸ்.கே ஆர்ச், டாஸ்மாக் கடை அருகில் கண்காணித்தபோது, அங்கு 2 பேர் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், மேற்படி இடத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த 1.ராஜா, வ/36, த/பெ.ஆறுமுகம், எண்.60, ஆற்காடு ரோடு, சாலிகிராமம் 2.குமார், வ/36, த/பெ.ஆறுமுகம், எண்.173, பூ மார்கெட், லட்சுமி மஹால், செங்குன்றம் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 180 மி.லி அளவு கொண்ட 119 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here