அசோக்நகர் பகுதியில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளில் ஒருவர் கைது. 1.5 சவரன் தங்கச்சங்கிலி பறிமுதல்

0
343

சென்னை, வடபழனி, சைதாப்பேட்டை ரோடு, எண்.13 என்ற முகவரியில் வசித்து வரும் ராஜா, வ/24, த/பெ.ஜெயபிரகாஷ் என்பவர் கடந்த 15.01.2020 அன்று இரவு சுமார் 09.30 மணியளவில் பணிமுடித்து, அசோக்நகர், டாக்டர் அம்பேத்கார் ரோட்டில், ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த 6 பேர் ராஜாவை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ராஜா பணம் தர மறுக்கவே 6 பேரும் ராஜாவை தாக்கி, ராஜா அணிந்திருந்த 1.5 சவரன் எடை கொண்ட தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து ராஜா R-3 அசோக்நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அசோக்நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், மேற்படி இடத்தில் தீவிர விசாரணை செய்தும், மேற்படி சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளில் 1.பிரகாஷ், வ/24, த/பெ.சக்ரவாத்தி, எண்.12, 12வது தெரு, புதூர், அசோக்நகர், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரர் ராஜாவின் 1.5 சவரன் எடை கொண்ட தங்கச்சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.

தப்பிச்சென்ற மற்ற குற்றவாளிகளை கைது செய்ய அசோந்கர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளி பிரகாஷ் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here